ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப்பின் ஒரு புதிய அதிரடி உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றையதினம்(6.2.2026) ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக ஒரு புதிய அதிரடி உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
ஈரானுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வர்த்தகம் (பொருட்கள் அல்லது சேவைகள்) செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் போது 25% கூடுதல் வரியைச் செலுத்த நேரிடும் என்று ட்ரம்ப், இதன் மூலம் அறிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம், பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவு மற்றும் ஏவுகணை மேம்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இந்த "அதிகபட்ச அழுத்தம்" கொடுக்கப்படுகிறது.
பேச்சுவார்த்தைகள்
குறிப்பாக, ஈரானில் கடந்த மாதம் நடந்த மக்கள் போராட்டங்களை அந்த நாட்டு அரசு ஒடுக்கியதற்குப் பதிலடியாக இது பார்க்கப்படுகிறது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே நேரத்தில், ஓமான் நாட்டில் அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
அமெரிக்க தரப்பில், ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.ஈரான் தரப்பில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி தலைமை தாங்குகிறார்.