எண்ணப்படும் ஈரானின் இறுதி நாட்கள் - இதுவே தாக்குலுக்கான நேரம்! ட்ரம்பின் மற்றுமொரு அதிரடி பதிவு..
இஸ்லாமிய நாடான ஈரான், உலக வர்த்தக கப்பல் போக்குவரத்திற்காக முக்கியமான ஹோர்மூஸ் நீரிணை வழித்தடத்தை மீண்டும் திறக்காவிட்டால், அதன் முக்கிய குடிமக்கள் உள்கட்டமைப்புகளை அமெரிக்க படைகள் தாக்கும் நாள் மற்றும் நேரத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப வெளியிட்டுள்ளார்.
சில பகுப்பாய்வாளர்கள், ட்ரம்ப் வெளியிட்ட இந்த தகவல், ஈரான் அந்த கடல் வழியை மீண்டும் திறக்க வேண்டிய புதிய காலக்கெடு என்றும் கருதுகின்றனர்.
கடுமையான வார்த்தைகள்
போரில் தாக்குதல் நேரத்தை முன்கூட்டியே அறிவிப்பது இதுவரை அரிதானது.
ஆனால் தனது ஆட்சிக் காலத்தில் ட்ரம்ப் வழக்கத்திற்கு மாறான முறைகளை பயன்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை, ஈரானின் உள்கட்டமைப்புகளை அழிப்பதாக அவர் பயன்படுத்திய கடுமையான வார்த்தைகள் இதற்கான சமீபத்திய உதாரணமாக பார்க்கப்படுகின்றது.
இந்த மிரட்டல்கள், ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E போர்விமானத்தில் இருந்த அமெரிக்க விமானப்படை ஆயுத அமைப்பு அதிகாரியை மீட்கப்பட்டதற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானில் நடைபெற்ற பாரிய தாக்குதல் -அழிக்கப்பட்ட பல இராணுவ தலைவர்கள்! ட்ரம்ப் பகிர்ந்துள்ள பரபரப்பு காணொளி
தாக்குதல் நேரம்
ட்ரம்பின் சமூக ஊடக தளம் Truth Social-ல், எதிர்பார்க்கப்படும் தாக்குதல் நேரம் எனக் கருதப்படும் தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.
“செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணி (Eastern Time)!” என்று அவர் பதிவிட்டுள்ளார். இது இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை ஆகும். இந்தப் போர் தற்போது ஆறாவது வாரத்திற்குள் நுழைந்துள்ளதுடன் மற்றும் வேகமாக விரிவடைந்துள்ளது.
ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் இஸ்ரேல் நகரங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள ஆற்றல் நிலையங்களை தாக்கியுள்ளன.
மேலும், உலகில் விற்பனை செய்யப்படும் எண்ணெயில் சுமார் 20% கடந்து செல்லும் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன.
ட்ரம்ப், அந்த நீரிணையை உடனடியாக திறக்குமாறு கோரி, அதற்கு இணங்காவிட்டால் கடுமையான விளைவுகள் இருக்கும் என எச்சரித்துள்ளார்.ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா - இஸ்ரேலுக்கு நரகத்தின் வாயில்கள் திறக்கப்படும்..! ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஈரானின் சூளுரை