கம்போடியா - தாய்லாந்து எல்லையில் தொடரும் மோதல் : தலையிட்டுள்ள ட்ரம்ப்
கம்போடியா - தாய்லாந்து எல்லையில் புதிதாக இடம்பெற்ற மோதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மதிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட;ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளின் எல்லை பகுதிகளில்
முன்னதாக, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்குதல் நடத்தியதாக பரஸ்பரம் குற்றம் சாட்டிய நிலையில், தாய்லாந்து தனது போர் விமானங்கள், கம்போடியாவின் இராணுவத் திறனை குறைக்க வான்வழித் தாக்குதல் நடத்திaதாக கூறியுள்ளது.

பல இடங்களுக்கு பரவிய சண்டையில் இராணுவ உறுப்பினர் மற்றும் நான்கு கம்போடியர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லையில் புதிதாக கண்ணிவெடிகள் வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டி, கம்போடியா மன்னிப்பு கேட்கும் வரை பேச்சுவார்த்தை நடக்காது என்று தாய்லாந்து அறிவித்துள்ளது.
எனினும் கம்;போடியா இதனை மறுத்துள்ளதுடன், தாய்லாந்தின் தாக்குதலை “ஆக்கிரமிப்பு” என்று கண்டித்துள்ளது.
இந்தநிலையில் இரு நாடுகளின் எல்லை பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri