638 பேர் பலி! அனர்த்தங்களால் நேர்ந்த பரிதாபம்
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 191 பேரை இதுவரை காணவில்லை.
இன்று முற்பகல் 10 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பதிவாகியுள்ள இறப்புக்கள்
மேலும், 501,958 குடும்பங்களைச் சேர்ந்த 1,737,330 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின்படி, கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், பதுளை மாவட்டத்தில் 90 இறப்புகளும், குருநாகல மாவட்டத்தில் 61 இறப்புகளும், கேகாலை மாவட்டத்தில் 32 இறப்புகளும், புத்தளத்தில் 37 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 28 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, 20,373 குடும்பங்களைச் சேர்ந்த 63,628 பேர் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 11 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri