இடைத்தேர்தல் களத்தில் ட்ரம்ப்: கருத்துக்கணிப்பில் பின்னடைவை சந்திக்கும் மைக்கேல் வொட்லி
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, வட கரோலினா மாநிலத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக்கேல் வொட்லிக்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
குடியரசுக் கட்சியின் தேசிய இடைத்தேர்தல் மாநாட்டிற்குப் பின்னர் ட்ரம்ப் பிரசாரம் செய்யும் முதல் நபர் இவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கரோலினா செனட் சபைக்கான போட்டியில், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஆளுநர் ரோய் கூப்பருக்கு எதிராகப் போட்டியிடும் மைக்கேல் வொட்லி, கருத்துக்கணிப்புகளில் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையிலேயே ட்ரம்ப் அவருக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார்.
இடைதேர்தலுக்காக களம் இறங்கிய ட்ரம்ப்
எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகக் கட்சிசாரா வாக்காளர்களின் ஆதரவு சரிவடைந்து வருவதாகக் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த மாநிலத்தில் சுமார் 40 சதவீதமான வாக்காளர்கள் எந்தவொரு கட்சியையும் சாராதவர்களாக உள்ள நிலையில், அவர்களின் ஆதரவைப் பெறுவதே தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தீர்மானமிக்க காரணியாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுதல் ஆகிய விவகாரங்களை மையப்படுத்தியே ட்ரம்ப் மற்றும் வொட்லி ஆகியோர் தமது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.