உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் புதிய திருப்பம் – புதைந்திருந்த மர்மங்களை கிளறும் விசாரணை
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணையில், இராணுவ மற்றும் அரச புலனாய்வுப் பிரிவுகளுக்கு தாக்குதல் தொடர்பான முன் தகவல்கள் கிடைத்திருந்தும், அவை உரிய பாதுகாப்புத் தரப்புகளுடன் பகிரப்படவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மன்னாரைச் சேர்ந்த வர்த்தகர் அலாவுதீன் ஆகியோரின் தொடர்புகள் குறித்தும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலாவுதீன், உயிர்த்த தாக்குதலில் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட இன்சாப் அஹமட்டின் மாமனார் என குறிப்பிடப்பட்டுள்ளார்.
அவரது படகுகள் மூலம் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோர் தாக்குதல்களுக்கு முன்னர் இந்தியாவுக்குச் சென்றனரா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அலாவுதீனின் மகள் பின்னர் விடுவிக்கப்பட்டது தொடர்பிலும் விசாரணையாளர்கள் தகவல்களை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரிஷாட் பதியுதீன் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் ஏற்கனவே மறுத்துள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக அவர்மீது முன்னெடுக்கப்பட்டிருந்த தனி வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...
சிரிலிய சவிய கணக்கு சர்ச்சை - ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லையாம்! மொட்டுக்கட்சி அம்பலப்படுத்திய உண்மை..