இன்று இயக்கப்படவிருந்த ஏழு தொடருந்து சேவைகள் இரத்து
இன்று இரவு சேவையில் ஈடுபடுத்தப்படவிருந்த இரவுநேர ஏழு தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று (16) இயக்கப்படவிருந்த 6 இரவு அஞ்சல் தொடருந்துகள் உட்பட 7 தொடருந்து சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த தொடருந்து சேவைகளை தொடருந்து பொது முகாமையாளர் இரத்து செய்துள்ளதாக தொடருந்துகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பு
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு இயக்கப்படவிருந்த மூன்று இரவு அஞ்சல் தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், காங்கேசன்துறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படவிருந்த மூன்று இரவு அஞ்சல் தொடருந்துகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், இன்று இரவு 11.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனைக்கு இயக்கப்படவிருந்த தொடருந்து சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 6 இரவு அஞ்சல் தொடருந்து பயணங்கள் மற்றும் ரம்புக்கனைக்கு இயக்கப்படவிருந்த ஒரு தொடருந்து பயணம் உட்பட, இன்று 7 தொடருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்