அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தமது அதிகாரங்களை நிரூபிக்க ட்ரம்பிற்கு சவால்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கொள்கைகள் மற்றும் வரம்பற்ற அதிகாரப் பயன்பாடுகள் தொடர்பான பல முக்கிய வழக்குகள், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் புதிய ஒன்பது மாத கால நீதித் தவணையில் விசாரணைக்கு வரவுள்ளன.
6-3 என்ற பழமைவாத பெரும்பான்மையைக் கொண்ட அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் கடந்த தவணைக் காலத்தில், ட்ரம்பின் ஜனாதிபதி அதிகாரங்கள் சார்ந்த பல வழக்குகளில் அவருக்கு சாதகமாகவும், சில முக்கிய விடயங்களில் பாதகமாகவும் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
சுங்க வரிகள், குடியுரிமை தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் கூட்டாட்சி அமைப்புகளின் வங்கியின் (Federal Reserve) அதிகாரியைப் பணிநீக்கம் செய்யும் ட்ரம்பின் முயற்சிகளுக்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டிருந்தது.
வழக்குகள்
இருப்பினும், சுதந்திரமான ஒழுங்குமுறை மீது அதிபரின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு உட்பட பல முக்கிய நகர்வுகளுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

தற்போது ஆரம்பமாகவுள்ள புதிய தவணைக் காலத்தில், ட்ரம்பின் தீவிர சட்டவிரோதக் குடியேற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பெருந்திரளான நாடு கடத்தல் கொள்கைகள் தொடர்பிலான வழக்குகள் முதன்மையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.