சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்காவின் புதிய திட்டம் - கடற்பரப்பில் 50 தானியங்கி படகுகள்
அமெரிக்க எல்லையில் சட்டவிரோதக் குடியேற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக, கானோ(Canoe) படகு வடிவிலான தானியங்கி ட்ரோன் படகுகளின் பயன்பாட்டைப் பெருமளவில் விரிவாக்க அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
“சீசாட்ஸ்” நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த படகுகள், ரியோ கிராண்டே நதி மற்றும் மெக்சிகோ வளைகுடாப் பகுதிகளில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடல்பரப்பில் 50 தானியங்கிப் படகுகள்
சூரிய சக்தியில் இயங்கும் இந்த லைட்ஃபிஷ் (Lightfish) ரக ட்ரோன் படகுகள், மனிதர்களின் தலையீடின்றி பல மாதங்கள் வரை தொடர்ச்சியாகக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடக்கூடியவை.

இவற்றில் பொருத்தப்பட்டுள்ள நவீன கெமராக்கள் மற்றும் உணா்பொறிகள் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள், நிகழ்நேரத்தில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது சோதனை அடிப்படையில், 10 படகுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றின் எண்ணிக்கையை 50 - ஆக உயர்த்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த தானியங்கிப் படகுகள் பெரிதும் உதவுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.