ட்ரம்பிற்கு ஐநாவில் நடந்த நாசவேலை..
ஐக்கிய நாடுகள் சபையில் தனக்கு நாசவேலை நடந்துள்ளதாகவும் அதற்கு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இடம்பெற்ற 80 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக ட்ரம்ப் சென்றிருந்தார்.
இதன்போது ட்ரம்ப் மற்றும் அமெரிக்க முதல் பெண்மணியான அவரின் மனைவியும் சபைக்கு செல்லும் வழியில் தானியங்கி படிக்கட்டுக்களில் ஏற முற்பட்ட போது குறித்த படிக்கட்டுக்கள் திடீரென இயங்கவில்லை.
கேலி செய்த ட்ரம்ப்
இந்நிலையில் ட்ரம்ப் உள்ளிட்டவர்கள் படிக்கட்டுக்களில் ஏறி மேலே சென்றுள்ளனர். அதேவேளை, அவர் ஐநாவில் உரையை ஆற்ற தொடங்கிய போது அங்கிருந்த teleprompter இயங்காமல் இருந்துள்ளது.
இதனை ட்ரம்ப் கேலி செய்யும் வகையில், "இங்கு நான் teleprompter இல்லாமல் உரையாற்றுவதற்கு மிக மகிழ்ச்சியடைகின்றேன். ஏனென்றால், teleprompter இயங்கவில்லை” என சிரித்துக் கொண்டே குறிப்பிட்டார்.
அதேவேளை, தனது உரையை தொடர்ந்த அவர், ஐநா தனக்கு கொடுத்தது தானியங்கி படிக்கட்டுக்கள் பாதி வழியில் நின்றதும் இயற்காத teleprompter உம் தான் என கேலியாக தெரிவித்தார்.
அதன் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு வருகை தந்தபோது, தனக்கு நாசவேலை நடந்துள்ளது என்றும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.
When the escalator came to a sudden halt, Secret Service just looked around hoping someone would fix the problem.
— Wall Street Mav (@WallStreetMav) September 23, 2025
That wasn’t supposed to happen and it turned Trump into a stationary target. Why did they not cover and evacuate him immediately? pic.twitter.com/Crtg2yPKbq
இருப்பினும், ட்ரம்பின் புகைப்பட பதிவாளர் எதிர்த்திசையில் நடந்து சென்றதன் காரணமாகவே குறித்த தானியங்கி படிக்கட்டுக்கள் இயங்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



