தேசிய மக்கள் சக்தியின் ஒரு வருட சாதனை இதுவே: சுகீஷ்வர பண்டார பகிரங்கம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் பகைமையும், பழிவாங்கும் உணர்ச்சியும் தவிர வேறு எந்தச் சாதனையும் நிகழவில்லை என சுகீஷ்வர பண்டார விமர்சித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், நவ ஜனதா பெரமுண கட்சியின் தலைவருமான சுகீஷ்வர பண்டார நேற்றுமுன் தினம் (23) மஹரகமவில் அமைந்துள்ள தனது கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வாக்குறுதிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வரமுன்னர் 1329 வாக்குறுதிகளை தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் அளித்திருந்தார்கள். ஆனால் அவற்றில் ஒன்றைத் தவிர வேறெதையும் நிறைவேற்றவில்லை.
அதேநேரம் கடந்த ஒரு வருட காலத்தினுள் பிரிவினைவாதம் மிகவும் வலுவாக வளர்ச்சி பெற்றுள்ளது. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்களின் அகற்றம், வவுனியா விமானப்படைத் தளக் காணி விடுவிப்பு போன்றவற்றை அவற்றுக்கான உதாரணங்களாக சுட்டிக்காட்டலாம்.
போலி பட்டப்படிப்பு
முன்னாள் சபாநாயகரின் போலி பட்டப்படிப்பு குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தொடர்பில் பகைமை மற்றும் பழிவாங்கும் உணர்ச்சி மட்டும் இந்த அரசாங்கத்தில் மேலோங்கி காணப்படுகின்றது. அதுமட்டுமே இந்த அரசாங்கத்தின் ஒரு வருட சாதனையாகும் என்றும் சுகீஷ்வர பண்டார தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
