ஹோர்முஸுக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்! ட்ரம்பிற்கு அதிரடி பதிலளித்த சர்வதேசங்கள்

Donald Trump Australia Japan China Strait of Hormuz
By Sajithra Mar 16, 2026 11:35 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் முக்கியமான கடல் பாதையான Strait of Hormuz பாதுகாப்பை உறுதி செய்ய மற்ற நாடுகளும் பங்கெடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். 

ஆனால், அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா, அந்தப் பகுதிக்கு போர் கப்பல்களை அனுப்ப திட்டமில்லை என தெரிவித்துள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி சந்தைகளிலும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

இன்று இலங்கையை வந்தடைந்த பாரிய கப்பல்.. எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

இன்று இலங்கையை வந்தடைந்த பாரிய கப்பல்.. எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

பாதுகாப்பு நடவடிக்கை 

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் சுமார் 20 சதவீதம் Strait of Hormuz வழியாகவே கடந்து செல்கிறது.

ஹோர்முஸுக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்! ட்ரம்பிற்கு அதிரடி பதிலளித்த சர்வதேசங்கள் | Trump Demands Others Help Strait Of Hormuz

இதையடுத்து, வளைகுடா நாடுகளில் இருந்து அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் அந்தப் பாதையை பாதுகாக்க முன்வர வேண்டும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். 

“அந்த இடத்திலிருந்து அவர்கள் எரிசக்தியைப் பெறுகிறார்கள். எனவே அந்தப் பகுதியை அவர்கள் தாமே பாதுகாக்க வேண்டும்,” என்று ட்ரம்ப் கூறினார்.

இந்நிலையில், ஜப்பானிய பிரதமர் சனே தகைச்சி, மத்திய கிழக்குக்கு போர் கப்பல்களை அனுப்ப எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அறிவித்துள்ளார். 

“எங்கள் அரசியலமைப்பு, போரைத் துறந்தது. சட்டப்பூர்வ வரம்புகளுக்குள் ஜப்பான் என்ன செய்ய முடியும் என்பதைக் குறித்து நாம் ஆய்வு செய்து வருகிறோம்” என அவர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். 

இலங்கையில் மற்றுமொரு விலை அதிகரிப்பு

இலங்கையில் மற்றுமொரு விலை அதிகரிப்பு

சீனாவிடமும் கோரிக்கை 

அதேபோல், அவுஸ்திரேலியா அரசும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உதவ போர்க் கப்பல்களை அனுப்ப திட்டமில்லை என்று தெரிவித்துள்ளது.

ஹோர்முஸுக்கு போர்க்கப்பல்களை அனுப்புங்கள்! ட்ரம்பிற்கு அதிரடி பதிலளித்த சர்வதேசங்கள் | Trump Demands Others Help Strait Of Hormuz

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அமைச்சரவையில், “அந்த பாதை முக்கியமானது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் அதற்காக எங்களிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை, நாங்கள் அதில் பங்களிக்கவும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ட்ரம்ப், இந்த நீரிணையை திறக்க உதவ சீனா உள்ளிட்ட நாடுகளும் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சீனா உதவாதபட்சத்தில் தனது பெய்ஜிங் பயணத்தை ஒத்திவைக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அந்தப் பயணத்தில் அவர் சீனாவின் ஜனாதிபதி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகள், ட்ரம்பின் வலியுறுத்தலுக்கு செவி சாய்க்காமல் மறுப்பு தெரிவித்துள்ளமை மத்திய கிழக்கு போரில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. 

Strait of Hormuzஇல் சிக்கியுள்ள இந்திய கப்பல்கள்.. மீட்டெடுக்க தீவிர நடவடிக்கையில் இந்தியா

Strait of Hormuzஇல் சிக்கியுள்ள இந்திய கப்பல்கள்.. மீட்டெடுக்க தீவிர நடவடிக்கையில் இந்தியா

மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US