விவேக் ராமசாமியை விமர்சனம் செய்த டிரம்ப்
டொனால்ட் டிரம்பின் அதிகாரபூர்வ சமூக வலைதளமான "ட்ரூத் சோஷியல்" (Truth Social) கணக்கில் விவேக் ராமசாமியை கடுமையாக விமர்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பதிவினை அவர் நேற்று(14.01.2024) வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,
"விவேக் என் ஆதரவாளரை போல் பிரசாரத்தை தொடங்கினார். ஆனால், தற்போது பிரசார யுக்திகளில் ஆதரவை தந்திரமாக மறைத்து விடுகிறார்.
ஜனாதிபதி தேர்தல்
நீங்கள் விவேக்கிற்கு அளிக்கும் வாக்கு, எதிரணிக்கு அளிக்கும் வாக்காகும். அவர் பேச்சில் ஏமாந்து விடாதீர்கள்.உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள். "மாகா" கனவை நனவாக்க விவேக் ஏற்றவர் அல்ல" என பதிவிட்டுள்ளார்.
இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிட களம் இறங்கி உள்ளார்.
அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீவிரமாக போட்டியிடுகிறார். அமெரிக்காவின் பல மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் மீது வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், அவர் ஜனாதிபதியாவது கேள்விக்குறியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
