14ஆவது வயதில் இலங்கையிலிருந்து வெளியேறிய சுவிற்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழர் வாழ்க்கை
சுவிற்சர்லாந்தின் தேசிய தொலைக்காட்சி ஒன்றில் (SRF 1) இலங்கையை பூர்வீகமாக கொண்ட மற்றும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சசிகுமார் எனும் இலங்கையை சேர்ந்த நபர் உள்நாட்டு யுத்தம் காரணமாக 1989ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதில் இலங்கையிலிருந்து வெளியேறினார்.
இலங்கையிலிருந்து வெளியேறிய சசிகுமார், அகதிகள் மையம் ஒன்றில் தஞ்சமடைந்து அதன் பின்னர் சுவிற்சர்லாந்தை வந்தடைந்தார்.
கலாச்சாரங்களை இணைக்கும் பாலம்
அத்துடன், அவர் இந்தியாவில் மேற்கொண்ட யாத்திரைகள் மூலம் இந்து கலாச்சாரம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சமையல் கலை போன்றவற்றை ஆழமாக கற்றுக்கொண்டார்.
இந்து மதத்தின் மதகுருவாகவும் மத்தியஸ்தராகவும் செயற்படும் இவர் கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாகவும் உள்ளார்.
ஏறத்தாழ 60,000 தமிழர்கள் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்து வருவதோடு அவர்களில் பலர் இந்து கலாச்சாரத்தை பின்பற்றுபவர்காளாகவும் உள்ளனர்.
இந்நிலையில், கலாச்சாரங்களுக்கிடையில் பாலமாக செயற்படும் சசிகுமார், ஒரு இந்து மத கோவிலை நடத்தி வருவது மட்டுமன்றி ஒரு உணவகத்தையும் நடத்தி வருகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |