6 மாதத்துக்குள் 6 போரைத் தீர்த்துவிட்டேன்! மீண்டும் தன்னை தானே புகழ்ந்துக்கொள்ளும் ட்ரம்ப்
நான் 6 மாதங்களுக்குள் 6 போர்களைத் தீர்த்துவிட்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
பேச்சுவார்த்தை
ரஷ்யா ஜனாதிபதி புடினுடன், ஜனாதிபதி ட்ரம்ப் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.
தொடர்ந்தும் கூறியதாவது,
“புடினுடனான இது ஒரு முக்கியமான சந்திப்பு. நாங்கள் உக்ரைனுக்கு எந்தப் பணத்தையும் செலுத்தவில்லை.
ட்ரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால்...இந்தியா மீது இரண்டாம் கட்ட வரி! மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
உக்ரைன்-ரஷ்யா போர்
நாங்கள் இராணுவ உபகரணங்களை வழங்குகிறோம். அதில் 100 சதவீதம் நேட்டோவால் செலுத்துகிறோம்.

நான் 6 மாதங்களுக்குள் 6 போர்களைத் தீர்த்துவிட்டேன். இந்தியா-பாகிஸ்தான் போரில் 6-7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, அவை அணு ஆயுதம் ஏந்தத் தயாராக இருந்தன, நாங்கள் அதைத் தீர்த்து வைத்தோம்.
நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் உக்ரைன்-ரஷ்யா போர் ஒருபோதும் நடந்திருக்காது” என மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam