இணையத்தில் பேசு பொருளாகியுள்ள ட்ரம்பின் புகைப்படம்
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான திருத்தந்தை பிரான்சிஸ்(Pope Francis) (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21ஆம் திகதி வத்திக்கானில் மரணம் அடைந்தார்.
வத்திக்கானுக்கு வெளியே உள்ள பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருத்தந்தையின் தோற்றத்தில் ட்ரம்ப்
இந்நிலையில், இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அதற்கு, நானே அடுத்த திருத்தந்தையாக இருக்க விரும்புகிறேன். அதுவே என்னுடைய முதல் தேர்வாக இருக்கும் என்று நகைச்சுவையாக ட்ரம்ப் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, பரிசுத்த திருத்தந்தையின் தோற்றத்தில் ட்ரம்ப் இருக்கும் இருக்கும் AI புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 4 மணி நேரம் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
