இதுவே சரியான நேரம்! நெதன்யாகுவின் மாஸ்டர் பிளேன் - கசிந்தது ட்ரம்புடனான மிக இரகசிய உரை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற மிக இரகசியமான தொலைபேசி உரையாடல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்கு (Operation Epic Fury) முன்னதாக, இடம்பெற்ற மிக மிக இரகசிய உரையாடல் அது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய முன்னாள் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது முக்கிய தளபதிகள் தெஹ்ரானில் இரகசியமாகச் சந்திப்பதை உளவுத்துறை உறுதி செய்தது.
ட்ரம்பை கொல்ல திட்டம்..
தெஹ்ரானில் உள்ள ஒரு ரகசிய வளாகத்தில் சனிக்கிழமை காலை சந்திக்கவிருப்பதை உளவுத்துறையினர் கண்டறிந்தனர். இந்தச் சந்திப்பு முதலில் சனிக்கிழமை இரவு நடைபெறுவதாக இருந்தது, ஆனால் திடீரென காலையிலேயே மாற்றப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அறிந்த நெதன்யாகு, உடனடியாக ட்ரம்பைத் தொடர்புகொண்டு, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஈரானியத் தலைமையைத் 'தலைதுண்டிக்கும்' (Decapitation strike) தாக்குதலை நடத்த நெதன்யாகு ட்ரம்பை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, ட்ரம்பைக் கொல்ல ஈரான் ஒரு கூலிப்படையை ஏவி சதித்திட்டம் தீட்டியதாக (Murder-for-hire plot) அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியிருந்தது.
முன்னாள் ஈரான் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே இந்தச் சதி நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
அழுத்தம் கொடுத்த நெதன்யாகு..
இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்திய நெதன்யாகு, "உங்களைக் கொல்ல முயன்றவர்களைப் பழிவாங்க இதைவிடச் சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது" என ட்ரம்பிடம் கூறியுள்ளார்.

ஈரானின் அச்சுறுத்தலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர இதுவே சரியான வழி என அவர் அழுத்தம் கொடுத்துள்ளார்.
நெதன்யாகுவின் வாதத்தை ஏற்று பெப்ரவரி 27ஆம் திகதி தாக்குதலுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து, பெப்ரவரி 28ஆம் திகதி அதிகாலை ஈரானில் குண்டுகள் வீசப்பட்டன.
இதனை தொடர்ந்து, கமேனி கொல்லப்பட்டதாக அன்று மாலையே ட்ரம்ப் அறிவித்தார். இந்நிலையில், ஈரானின் பதிலடித் தாக்குதலில் 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளனர்.
கமேனிக்கு பதிலாக அவரது மகன் மொஜ்தபா (Mojtaba) புதிய தலைவராகப் பதவியேற்றுள்ளார்.
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam