ஈரான் அணுமின் நிலையம் அருகே தாக்குதல்: ரஷ்யா கடும் எச்சரிக்கை
ஈரானின் புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்திற்கு அருகே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் "மிகவும் ஆபத்தானவை" என்று ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இத்தகைய நடவடிக்கைகள் ஈடுசெய்ய முடியாத பேரழிவுகளை உண்டாக்கக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளார்.
பெரும் அச்சுறுத்தல்
அணுசக்தி கட்டமைப்புகளுக்கு அருகில் நடத்தப்படும் இராணுவத் தாக்குதல்கள் சர்வதேச பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என்றும், இது குறித்து ரஷ்யா தனது கண்டனத்தை அமெரிக்காவிடம் நேரடியாகப் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலானது அணுமின் நிலையத்தின் முக்கியப் பகுதிக்கு மிக அருகாமையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தற்போதைக்கு அணுக்கசிவு ஏதும் ஏற்படவில்லை என்றும், கதிர்வீச்சு அளவு சீராக இருப்பதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவால் கட்டப்பட்ட இந்த அணுமின் நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரஷ்ய நிபுணர்கள் பணியாற்றி வரும் சூழலில், அங்கு நிலவும் போர் பதற்றம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டு, அரசியல் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri