திடீரென நுழைந்த ஆயுததாரி! சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்திய பாதுகாப்பு படை - டிரம்ப் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
வாஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்ற சந்தேகநபர் குறித்த விவரங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தாக்குதலுக்காக வந்த சந்தேகநபர் பல ஆயுதங்களைக் கொண்டிருந்ததாகவும், அந்த நிகழ்வில் இருந்த பாதுகாப்பு சோதனைச் சாவடிக்குள் நுழைய முயன்றதாகவும் கூறினார்.
அப்போது, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி சந்தேகநபரைக் கட்டுப்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட நபர் கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது நபர் என்றும், அவரிடம் பல ஆயுதங்கள் இருந்ததாகவும் டிரம்ப் கூறினார்.
அத்துடன் "இரகசிய சேவைப் பிரிவின் மிகவும் துணிச்சலான பல உறுப்பினர்களால் அந்த நபர் வீழ்த்தப்பட்டார்" என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாம் இணைப்பு
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ட்ரம்ப் இட்டுள்ள மற்றுமொரு பதிவில், நெறிமுறையின்படி, நாங்கள் இந்த வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சட்ட அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டுள்ளது, அதன்படி நாங்கள் உடனடியாக வெளியேறுவோம்.
இன்னும் 30 நிமிடங்களில் வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் சந்திப்பு அறையிலிருந்து நான் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவிருக்கிறேன். முதல் பெண்மணி, துணை ஜனாதிபதி மற்றும் அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் நல்ல உடல்நிலையில் உள்ளனர்.
இன்னும் அரை மணி நேரத்தில் நாங்கள் உங்களுடன் பேசுவோம். இந்த நிகழ்வுக்குப் பொறுப்பான அனைத்துப் பிரதிநிதிகளுடனும் நான் பேசியுள்ளேன், மேலும் 30 நாட்களுக்குள் நாங்கள் இதை மறுதிட்டமிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சற்றுமுன் அவர் சிசிடிவி காணொளி பதிவொன்றையும், புகைப்படமொன்றையும் பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ள நிலையில் கைவிலங்குடன் நபரொருவர் கீழே விழுந்து கிடக்கும் வகையிலான புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார். எனினும் அது சந்தேகநபரின் புகைப்படமா என்பது குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து நிகழ்வு நடைபெற்ற வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலிலிருந்து ட்ரம்ப் பொலிஸாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பில் சற்று முன் ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் பதிவு
குறித்த பதிவில் மேலும், வாஷிங்டன் டி.சி.யில் இது ஒரு மறக்க முடியாத மாலைப் பொழுது. இரகசிய சேவை மற்றும் சட்ட அமலாக்கத் துறையினர் மிகச் சிறப்பாகப் பணியாற்றினர். அவர்கள் விரைவாகவும் துணிச்சலுடனும் செயல்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், "நிகழ்ச்சியைத் தொடரலாம்" என்று நான் பரிந்துரைத்துள்ளேன்.
ஆனால், இது முற்றிலும் சட்ட அமலாக்கத் துறையின் வழிகாட்டுதலின்படியே நடைபெறும். அவர்கள் விரைவில் ஒரு முடிவை எடுப்பார்கள்.
அந்த முடிவு எதுவாக இருந்தாலும், இந்த மாலைப் பொழுது திட்டமிட்டதை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும், மேலும், நாம் இதை மீண்டும் செய்ய வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தகவல் வழங்கலை மறுக்க முடியுமா? மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam