ஈரானின் நிபந்தனைகளை மீண்டும் நிராகரித்தார் ட்ரம்ப்: பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க ஈரானிய வெளி விவகார அமைச்சகம் முன்வைத்துள்ள புதிய சமாதானத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் இந்த பதில் திட்டத்தை "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
இருப்பினும், ஈரானிய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் பேசுகையில், ஈரானின் இந்தத் திட்டம் மிகவும் "நியாயமான மற்றும் தாராளமான" சலுகைகளைக் கொண்டது.
அமைதிப் பேச்சுவார்த்தை
இது ஈரானின் தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டும் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காகவும் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக லெபனான் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான வழிமுறைகள் குறித்து கடந்த சில நாட்களாக வெளியான தகவல்களின் அடிப்படையிலேயே ஈரானின் கோரிக்கைகள் அமைந்துள்ளன.

ஈரானின் இந்தத் தாராளமான சலுகைகளை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், ஒரு பொதுவான உடன்பாட்டை எட்டுவதில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் ஒரு தெளிவற்ற சூழலே காணப்படுகிறது.
இத்தகைய முரண்பட்ட நிலைப்பாடுகளால் அமைதிப் பேச்சுவார்த்தையில் அடுத்தகட்ட நகர்வு எது என்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam