ஈரான் உலக நாடுகளுடன் விளையாடுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
ஈரான் உலக நாடுகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈரான் மீது மீண்டும் ட்ரம்ப், கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பாகிஸ்தானிய மத்தியஸ்தத்தின் வழியாக அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு ஈரான் தனது பதிலைச் சமர்ப்பித்த சில மணிநேரங்களிலேயே ட்ரம்ப் இந்த விமா்சனத்தை மேற்கொண்டுள்ளார்.
திறைசேரியில் மாயமான பணம் பிரபல நாட்டில் இருக்கிறது: விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
அமெரிக்காவை ஏமாற்ற முயற்சிப்பதாக
ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்காவுடனும் ஒட்டுமொத்த உலகத்துடனும் விளையாடிக் கொண்டிருக்கிறதாகவும், அவர்கள் இனி சிரிக்கப் போவதில்லை எனவும் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய முன்மொழிவை அமெரிக்கா முழுமையாக ஆய்வு செய்ததா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

எனினும், ஜனாதிபதி ட்ரம்ப் தனது பதிவில் அந்த முன்மொழிவை நேரடியாகக் குறிப்பிடாமல், "ஈரானின் பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று சாடியுள்ளார்.
ஈரான் தனது அமைதித் திட்டப் பதிலைப் பாகிஸ்தான் தூதர்கள் மூலம் அமெரிக்காவிடம் வழங்கியது. ஈரானின் இந்த பதிலைத் தொடர்ந்து, அவர்கள் அமெரிக்காவை ஏமாற்ற முயற்சிப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் மிகவும் தெளிவாக உள்ளார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது; உலகப் பொருளாதாரங்களை அவர்களால் பணயக்கைதியாக வைத்திருக்கவும் முடியாது" என ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam