திறைசேரியில் மாயமான பணம் பிரபல நாட்டில் இருக்கிறது: விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
திறைசேரியில் ஹெக்கிங் செய்யப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலவெயார் மாநிலத்தில் (State of Delaware) இருப்பதாக விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அமெரிக்கன் டொலர் 200 ஐ அண்மித்த தொகையே இருப்பதாக சொல்லப்படுகிறது.
விசாரணை அதிகாரிகளால் ஹெக்கிங் செய்யப்பட்ட பணம் எந்த வங்கி கணக்குக்கு போயிருக்கிறது என ஆராய்ந்ததில் அமெரிக்காவின் டெலவெயார் மாநிலத்திலுள்ள ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கே போயிருக்கிறது.
ஆனால் அந்த நிறுவனத்திற்கு நான்கு வங்கி கணக்குகள் இருப்பதாகவும் அதில் ஒன்றிலேயே 200க்கு அண்மித்த அமெரிக்க டொலர் இருப்பதாக தேடி கண்டுபிடித்துள்ளனர்.
வெளிநாட்டு வங்கி கணக்குகளில் உள்ள பணம்
ஏனைய வங்கி கணக்குகளில் உள்ள பணம் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிக்கின்றனர்.மேலும் ஒரு வங்கி கணக்கில் இடப்பட்ட பணம் அமெரிக்காவில் வேறு ஒரு மாநிலத்திற்கு சென்றுள்ளதாகவும் அதன் விபரங்களை பெற்றுக் கொள்வது கடினமானதாக இருக்கிறது.
ஏனென்றால் அங்குள்ள சட்டத்திட்டங்கள் கடுமையாக இருப்பதால் ஆகும். ஆனால் ஹெக்கிங் செய்யப்பட்ட பணம் ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கே சென்றுள்ளது.
குறித்த ஹெக்கர் மூன்றாம் நபராகவே இதில் ஈடுபட்டுள்ளார். ஒரு நிறுவனத்தின் பெயரிலே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
நிறுவனத்தின் பெயரில் நடைபெற்ற ஹெக்கிங்
அதாவது பிஸ் சொலூசன் என்ற பெயரிலான நிறுவனமாகும்.குறித்த நிறுவனம் தொடர்பிலான அனைத்து விபரங்களையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நான்கு சந்தர்ப்பங்களில் இந்த நிறுவனத்திற்கே பணம் அனுப்பப்பட்டுள்ளது. 2025 நவம்பர் மாதம் 25 ஆம் திகதியில் இருந்து ஆறு வவுச்சர்கள் போட்டப்பட்டுள்ளது.
அதில் மூன்றே ஹொக்கிங் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ஒரு வவுச்சர் பிழையான கணக்கு என திரும்புகையில் மீண்டும் இது உண்மையா என வினவுகையில் ஆம் என பதிலளித்து நான்காவது சந்தர்ப்பத்திலும் ஹெக்கரால் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நான்கு சந்தர்ப்பங்களிலேயே 2.5 மில்லியன் மாயமாகியுள்ளது. பிஸ் சொலூசன் என்ற நிறுவனம் அமெரிக்காவின் டெலவெயார் மாநிலத்தில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நான்காவது சந்தர்ப்பத்தில் ஹெக்கிங் செய்யப்பட்ட பணம் அமெரிக்காவின் வேறொரு மாநிலத்தில் உள்ள வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளதையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தகவல்களை வைத்து கொண்டு குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும் என விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan