கபில சந்திரசேனவின் நிலைக்கு ராஜபக்சக்களே பொறுப்பு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவுக்கு நேர்ந்த நிலைக்கு, ராஜபக்ச குடும்பத்தினரே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர இது கருத்து வெளியிட்டுள்ளார். கபில சந்திரசேன ஆரம்பத்தில் ஒரு சாதாரண தொழிலையோ அல்லது வேலையையோ செய்துகொண்டிருந்த ஒரு நபர். ஆனால், ராஜபக்சக்களே அவரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குள் கொண்டு வந்தனர் என தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் கபில சந்திரசேனவை ராஜபக்சக்களே தொடர்புபடுத்தினர். இந்த ஊழலால் அவர் ஒரு பலிகடாவாக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த எயார்பஸ் ஊழல் இலங்கைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக, இதற்காக 2 மில்லியன் டாலர் லஞ்சமாகப் பெறப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு சர்வதேச ரீதியில் அம்பலமானது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித வாழ்க்கை என்பது ஒரு குறுகிய காலம் மட்டுமே என்பதை நினைவூட்டிய தேவானந்த சுரவீர, அந்தத் தேசத்தில் சமூகத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து மறைவதே ஒரு சிறந்த செயல் என குறிப்பிட்டுள்ளார்.
கபில சந்திரசேனவுக்கு இத்தகைய துரதிர்ஷ்டவசமான நிலையை ராஜபக்சக்களே ஏற்படுத்திக் கொடுத்தனர் என்பதை வலியுறுத்துவதாக தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri