இஸ்ரேல் - கட்டார் மோதல்: ட்ரம்ப் வழங்கிய உறுதி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் கட்டாரை தாக்க மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
கட்டாரில் தங்கியிருந்த ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளரின் குழு மீது, கடந்த வாரம், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமையால், அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடான கட்டார் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
முன்னதாக ஜெருசலேமில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ருபியோவுடனான சந்திப்பின் போது, நெதன்யாகு, மேலும் தாக்குதல்களை நிராகரிக்க தவறியிருந்தார்.
எனினும், இந்த கருத்தை மறுதலிக்கும் வகையிலேயே ட்ரம்ப்பின் உறுதிமொழி வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்
இந்தநிலையில், இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை சந்தித்த பிறகு வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கட்டாருக்குச் செல்வார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்புக்களின் மூலம், தமது இரண்டு நெருங்கிய நட்பு நாடுகளான இஸ்ரேலுக்கும் கட்டாருக்கும் இடையிலான பதற்றங்களைத் தணிக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
இதேவேளை, கடந்த வாரம் இஸ்ரேலின் தாக்குதல் குறித்து உச்சிமாநாட்டில் பேசிய கட்டாரின் அரச தலைவர், காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமது பணயக்கைதிகள் குறித்து இஸ்ரேல் கவலைப்படவில்லை.
புதிலாக, காசா இனி வாழத் தகுதியற்றதாக இருக்கும் இடம் என்பதை உறுதி செய்வதற்கான செயற்பாட்டில் மட்டுமே ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
