உலகை உலுக்கிய ட்ரம்ப்..! பதவியேற்ற 100 நாட்களில் 140 உத்தரவுகள்..

Donald Trump United States of America World
By Rukshy Apr 30, 2025 11:05 AM GMT
Report

உலகையே உலுக்கிய சர்ச்சைக்குரிய முடிவுகளுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பல அதிரடி மாற்றங்களை உலகம் கண்டது. பல விடயங்கள் சர்ச்சைக்குரியதாக மாறி நீதிமன்றம் வரை சென்றன.

இந்த குறுகிய காலத்தில் ட்ரம்பிற்கு எதிராக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய - பாகிஸ்தான் பதற்ற நிலை : இலங்கையின் அணிசேரா பங்கை எதிர்பார்க்கும் பாகிஸ்தான்

இந்திய - பாகிஸ்தான் பதற்ற நிலை : இலங்கையின் அணிசேரா பங்கை எதிர்பார்க்கும் பாகிஸ்தான்

பதவியேற்ற சில நாட்களில்...

வெறும் 100 நாட்களில், ட்ரம்ப் 140 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவற்றில் 36 ஒப்பந்தங்கள் முதல் வாரத்திலேயே கையெழுத்திடப்பட்டன.

உலகை உலுக்கிய ட்ரம்ப்..! பதவியேற்ற 100 நாட்களில் 140 உத்தரவுகள்.. | Trump 140 Orders In 100 Days Of Inauguration

அதே நேரத்தில் முன்னைய ஜனாதிபதி ஜோ பைடன், தனது நான்கு ஆண்டுகால பதவிக்காலத்தில் வெறும் 162  நிர்வாக உத்தரவுகளில் மட்டுமே.கையெழுத்திட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றார்.

பதவியேற்ற சில நாட்களில், மெக்சிகோ எல்லையில் 2,500 தேசிய பாதுகாப்பு உறுப்பினர்களுடன் 1,500 வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.

கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாய் இணைக்கப்படும் என்றும் கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறக்கூடும் என்றும் அவர் அறிவித்தார்.

அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை

மேலும், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதன் மூலம் ட்ரம்ப் சர்வதேச வர்த்தகப் போரை தொடங்கினார்

எதிர்த்து நின்ற சீனா மீது 245 சதவீத வரி விதிக்கப்பட்டதோடு, மற்ற நாடுகள் மீதான வரி 90 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உலகை உலுக்கிய ட்ரம்ப்..! பதவியேற்ற 100 நாட்களில் 140 உத்தரவுகள்.. | Trump 140 Orders In 100 Days Of Inauguration

சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீதான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த 1,39,000 பேரை இதுவரை நாடு கடத்தியுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவர ஒரு நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, ஆனால் அமெரிக்க நீதிமன்றம் அந்த உத்தரவை அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி நிறுத்தி வைத்துள்ளது. 

பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்

தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது.

 அனைத்து அரசு நிறுவனங்களிலும் கிட்டத்தட்ட 60,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உலகை உலுக்கிய ட்ரம்ப்..! பதவியேற்ற 100 நாட்களில் 140 உத்தரவுகள்.. | Trump 140 Orders In 100 Days Of Inauguration

மேலும் ட்ரம்ப் நிர்வாகம் குறைந்தது 145,000 வேலைகளை நீக்கியுள்ளது.

பலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும், காசா கைப்பற்றப்பட்டு ஒரு ஆடம்பரக் குடியிருப்பாக மாற்றப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவிற்கு எதிரானவை என்று முத்திரை குத்தப்பட்டன.

100ஆவது நாள் கொண்டாட்டம்

போராடுபவர்களின் விசாக்களை இரத்து செய்து நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உலகை உலுக்கிய ட்ரம்ப்..! பதவியேற்ற 100 நாட்களில் 140 உத்தரவுகள்.. | Trump 140 Orders In 100 Days Of Inauguration

இதற்கிடையில், கடந்த 2021 இல் ட்ரம்ப் வெற்றி பெறாததால் வெள்ளை மாளிகையை தாக்கிய அவரது ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பு, காலநிலை ஒப்பந்தம் ஆகியவ்ற்றில் இருந்து அமெரிக்கா விலகியது.

நாட்டில் தற்போது இரண்டு வகையான மக்கள் மட்டுமே இருப்பார்கள் என கூறி திருநங்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்நிலையிவ், பதவியேற்ற 100ஆவது நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மிச்சிகன் மாகாணத்தில் அரசியல் எதிரிகளை குறிவைத்து, பிரசார பாணி உரையுடன் கொண்டாடியுள்ளார்.

இந்திய - கனேடிய உறவுகளை சீரமைக்க தயாராகும் மோடி

இந்திய - கனேடிய உறவுகளை சீரமைக்க தயாராகும் மோடி

இந்திய முப்படையின் தீவிர தயார்நிலை.. வலுக்கும் காஷ்மீர் தாக்குதல் விவகாரம் !

இந்திய முப்படையின் தீவிர தயார்நிலை.. வலுக்கும் காஷ்மீர் தாக்குதல் விவகாரம் !

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US