இந்திய - கனேடிய உறவுகளை சீரமைக்க தயாராகும் மோடி
கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளமையானது விரிசலடைந்த இந்திய - கனேடிய உறவுகளை சீரமைப்பதற்கான முதல் படியாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இந்தியா - கனடா இடையே பாதிப்படைத்திருந்த உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அங்குள்ள இந்திய தூதர் மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இருதரப்பு உறவு
இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததா காலிஸ்தான் அமைப்பு மீது இந்தியா குற்றம் சுமத்தியபோதும், கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இருநாட்டு தூதரங்களிலும், ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் கனடா பிரதமராக இருந்து ட்ரூடா உட்கட்சி பூசல் காரணமாக கடந்த மாதம் பதவி விலகினார்.
இது லிபரல் கட்சிக்கு மார்க் கார்னே தலைமை ஏற்க வழிவகுத்தது. பொது தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று, பிரதமரானால், இந்தியா - கனடா இடையேயான உறவை மேம்படுத்துவேன் என மார்க் கார்னே ஏற்கெனவே கூறியிருந்தார்.
லிபரல் கட்சி
அதேபோல் பொது தேர்தலில் லிபரல் கட்சி தொடர்ந்து 3ஆவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில் மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
கனடாவின் பிரதமராக நீங்கள் (மார்க் கார்னே) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகள்.
இந்தியாவும் கனடாவும் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
நமது கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நமது மக்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்” என மோடி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 43 நிமிடங்கள் முன்
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri