தாய்நாட்டின் மீதான உண்மையான பற்று பெண்களை மதிப்பதே - நாமல்
பெண்களையும் தாய்மார்களையும் மதிக்கத் தவறும் ஒரு சமூகத்தால், தாய்நாட்டின் மீது உண்மையான அன்பையும் மரியாதையையும் கட்டியெழுப்ப முடியாது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாத்தளையில் நேற்று (08) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இளைஞர்கள் அச்சமின்றி வாழ வழி
இந்த நாடு தாய்மார்கள் மற்றும் பெண்களின் தியாகங்கள் மற்றும் ஆசீர்வாதங்களினால் கட்டியெழுப்பப்பட்டது நமது தாய், மனைவி மற்றும் சகோதரியை நாம் எவ்வளவு நேசிக்கிறோமோ, அதே அளவு தாய்நாட்டையும் நேசிக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுப் போரின் போது, தமது பிள்ளைகளை போர்க்களத்திற்கு அனுப்பி பல தாய்மார்கள் அளப்பரிய துன்பங்களை அனுபவித்தனர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சுதந்திரத்திற்காக நாட்டின் தாய்மார்களும் புதல்விகளும் பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர் பொருளாதார நெருக்கடி நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை முதலில் எதிர்கொள்பவர்கள் பெண்களே.
குறிப்பாக, வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், வீட்டுச் செலவுகளை நிர்வகிப்பதில் தாய்மார்களும் மனைவிகளுமே பெரும் சுமையைச் சுமக்கின்றனர்.
சமூகத்தில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றுவதால், அவர்களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒவ்வொரு அரசியல் கட்சியும் அரசாங்கமும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் பொருளாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே இவ்விழாவின் முக்கிய கருப்பொருளாக அமைந்ததுள்ளது.