அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவதில் சிக்கல்!
மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரளை அழைத்து வருவதில் சிக்கல்நிலை காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி,அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஒருவாரகாலப்பகுதியில் அறிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri