திடீரென தீப்பற்றி எரிந்த தொடருந்து இயந்திரம்: அதிகாரிகள் தீவிர விசாரணை

Trincomalee Eastern Province
By Kiyas Shafe Apr 08, 2026 12:35 PM GMT
Report

திருகோணமலை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்து என்ஜின் இயந்திரம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. ​

குறித்த சம்பவமானது இன்றையதினம் (08.04.2026) இடம்பெற்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று காலை திருகோணமலை தொடருந்து நிலைய வளாகத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த என்ஜின் இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென புகை கிளம்பியுள்ளது.

களுதாவளை பிரதேச சபை முடக்கம்! மக்கள் சேவையை பெற முடியாத அவலநிலை

களுதாவளை பிரதேச சபை முடக்கம்! மக்கள் சேவையை பெற முடியாத அவலநிலை

தீப்பற்றியதற்கான காரணம்

அதனைத் தொடர்ந்து என்ஜின் பகுதி தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

இதனை அவதானித்த தொடருந்து நிலைய ஊழியர்களும் பாதுகாப்புப் பிரிவினரும் உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர். ​

திடீரென தீப்பற்றி எரிந்த தொடருந்து இயந்திரம்: அதிகாரிகள் தீவிர விசாரணை | Trincomalee Train Engine Catches Fire

சுமார் 60 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள இயந்திரத்தில் திடீரென தீப் பரவியமைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.

முன்னாள் போராளிகளை அரசியல் பகடைகாய்களாக பாவிக்க முனைவதாக குறிப்பிட்டு எழுந்துள்ள கண்டனம்

முன்னாள் போராளிகளை அரசியல் பகடைகாய்களாக பாவிக்க முனைவதாக குறிப்பிட்டு எழுந்துள்ள கண்டனம்

அறிக்கை 

தூரப்பகுதிகளில் இருந்து நிலையத்திற்கு வரும் தொடருந்துகளை நிலைய எல்லைக்குள் கொண்டு வந்து நிறுத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த இயந்திரம், இன்று மதியம் கொழும்பிலிருந்து வந்த தொடருந்து பெட்டிகளை இடமாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திடீரென தீப்பற்றி எரிந்த தொடருந்து இயந்திரம்: அதிகாரிகள் தீவிர விசாரணை | Trincomalee Train Engine Catches Fire

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நிலைய அதிபர் எஸ். சர்வேஸ்வரன், தீயணைப்பு துறையினரின் அறிக்கை விரைவில் கிடைக்கும் என தெரிவித்தார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பேருந்துகளில் விசேட சோதனை நடவடிக்கை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பேருந்துகளில் விசேட சோதனை நடவடிக்கை

மின் கசிவு 

மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாக சந்தேகிக்கப்படும் நிலையில், தொடருந்து திணைக்களத்தின் தொழில்நுட்பக் குழுவினர் இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ​

திடீரென தீப்பற்றி எரிந்த தொடருந்து இயந்திரம்: அதிகாரிகள் தீவிர விசாரணை | Trincomalee Train Engine Catches Fire

இந்த தீ விபத்தில் தொடருந்து இயந்திரம் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக தகவல்- யூசுப்

நீதி அமைச்சரை மன்னிப்பதாக அறிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்

நீதி அமைச்சரை மன்னிப்பதாக அறிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US