தொடர்ந்து தாக்குவோம்! ட்ரம்பின் அறிவிப்புக்கு பிறகு நெதன்யாகு வெளியிட்ட அதிரடி தகவல்
ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு அமெரிக்கா எடுத்துள்ள முடிவுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த இரண்டு வார கால போர்நிறுத்தம் லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 'X' தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "ஈரான் இனி அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அண்டை அரபு நாடுகளுக்கு அணுவாயுத அல்லது பயங்கரவாத அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை இஸ்ரேல் ஆதரிக்கிறது" என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
லெபனானுக்கு எச்சரிக்கை
ஆனால், இந்த தற்காலிக போர்நிறுத்தம் லெபனானை உள்ளடக்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் லெபனான் உட்பட அனைத்து இடங்களிலும் உடனடி போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்ததைத் தொடர்ந்து நெதன்யாகுவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், லெபனானின் தெற்குப் பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அந்நாட்டு தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டயர் பிராந்தியத்தில் உள்ள ஸ்ரீபா நகரில் குண்டுவீச்சு நடத்திய இஸ்ரேலியப் படைகள், அங்குள்ள ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கையும் விடுத்துள்ளன.
மறுபுறம், பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் போர்நிறுத்தம் குறித்த செய்திகளுக்கு மத்தியில், லெபனான் இராணுவம் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் முன்னேறியுள்ள தெற்கு கிராமங்களுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு இராணுவம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri