களுதாவளை பிரதேச சபை முடக்கம்! மக்கள் சேவையை பெற முடியாத அவலநிலை
மண்முனை தென்எருவில்பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்திற்கு முரணாக தன்னிச்சையாக செயல்பட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதுடன் பொது மக்கள் சேவைகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் உறுப்பினர் யோ. சந்திரகுமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தொடர்ச்சியாக சட்டத்திற்கு முரணாக செயற்பட்டு வருவதோடு, தன்னிச்சையான முடிவுகளையும் எடுப்பதனால் சபையில் பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.
உரிய நடவடிக்கை
அத்துடன் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதுடன் பொது மக்கள் சேவைகளைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். பிரதேச சபையில் இதுவரை காலமும் பல மோசடிகள், சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
அவற்றை கடந்தகாலங்களில் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம். அதனை மீண்டும் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

தவிசாளர் தொடர்ந்தும் மோசடிகளில் ஈடுபடுவதுடன் சட்டத்திற்கு முரணான வகையில் அதிகார துஸ்பிரயோகம் செய்துவருவதனால் சபை நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதுடன் பொது மக்கள் சேவையினைப்பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து சபையினை சிறப்பாக கொண்டு செல்வதற்கு ஆவண செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றேன். என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி! சிக்கிய பலர் - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam