திருகோணமலையில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்! உயிரிழந்த வீரர்களின் விபரங்கள் வெளியாகின
திருகோணமலை, சீனக்குடா விமானப்படை தளத்தில் விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு விமானப்படை வீரர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
சீனக்குடா விமானப்படை பயிற்சி முகாமில் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட GT6 ரக இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் விமானப்படை பொறியியலாளர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் விமானி தரிந்து ஹேரத் மற்றும் பொறியியலாளர் மதுசங்க வர்ணகுலசூரிய ஆகியோரோ இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
இலகுரக விமானம் ஓடுபாதையில் இருந்து சற்று உயரத்தில் இருந்த போது திடீரென விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளதாக விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட மூன்று நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த இலகுரக விமானம் சோதனை நோக்கத்திற்காக பறக்கவிடப்பட்டதாகவும் விமானப்படை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த விமானம் ஓடுபாதையில் விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சீனக்குடா பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
