திருகோணமலையில் விழுந்து நொறுங்கிய விமானப்படையின் பயிற்சி விமானம் (Video)
திருகோணமலை - சீனக்குடா விமான பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலை - சீனக்குடா விமான கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 பறக்கும் பயிற்சி பிரிவின் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட PT 6 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
குறித்த விபத்து இன்று (07.08.2023) முற்பகல் 11.27 மணியளவில் சீனக்குடா விமானப்படை முகாம் பகுதியில் இடம்பெற்றதுடன், அதில் பயணித்த இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.
விமானப்படை விசாரணை
மேலும், இந்த விபத்தில் 02712 W/C HMTK ஹெரத் மற்றும் 12271 F/O KMPM வரன்சூரியா ஆகிய விமானப்படை வீரர்களே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
