திருகோணமலை ஆறு கடற்தொழிலாளர்கள் கைது
திருகோணமலை- சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த ஆறு கடற்தொழிலாளர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனையாவெளி பகுதியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த ஆறு பேரையும் நேற்று (11.04.2023) மாலை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் விசாரணை
மனையாவெளியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்கள் கரவலை இழுத்துக் கொண்டிருந்த போது சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர்கள் சிலர் வருகை தந்து வலையை வெட்டி பிடித்த மீன்களை எடுத்துச் சென்றுள்ளதாக துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட துறைமுக பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
கைது
செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுவருவதாகவும் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலை துறைமுகப் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
