யாழில் இடம்பெற்ற பாரிய பணமோசடி: பலர் கைது!
யாழ்ப்பாணம்- நெல்லியடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பெருந்தொகை பண மோசடியுடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நெல்லியடியில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நபரொருவரிடம் இருந்து, வெளிநாட்டு நாணயத் தாள்கள் உள்ளடங்கலாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபா வரை அண்மையில் மோசடி செய்யப்பட்டிருந்தன.
மேலதிக விசாரணைகள்
இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையிலேயே, சந்தேகநபர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், குறித்த நபர்களிடமிருந்து ஒருதொகைப் பணம் மீட்கப்பட்டதுடன், எஞ்சிய பணத்தை மீட்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
