ரணிலின் கைது காரணமாக உயிரிழந்த பல்கலைக்கழக வேந்தர்! எழுந்துள்ள சர்ச்சை
ரணில் விக்ரமசிங்கவின் கைது காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியினால் லோர்ட் போல் ஒஃப் மேரிலேபோன் திடீரென உயிரிழந்திருக்கலாம் என ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
1999 முதல் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றிய லோர்ட் போல் என் அழைக்கப்படும் ஸ்வராஜ் போலின் அழைப்பின் பேரில் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு பயணம் செய்ததாக திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார்.
அபத்தமான வழக்கு
இது ஒரு அபத்தமான வழக்கு. ஒரு ஜனாதிபதி பயணம் செய்ய உரிமை உண்டு, மேலும் அனைத்து செலவுகளும் கணக்காய்வாளர் நாயகத்தினால் முறையாகக் கணக்கிடப்படுகின்றன.
ஏதேனும் பிரச்சினை இருந்தால், கைதுக்கு மாறாக, மேலதிக கட்டணம் அறவிட்டிருக்க முடியும். எனினும் இந்த நடவடிக்கை இலங்கைக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் விளக்கமறியல் சர்வதேச அளவில் விளைவுகளை ஏற்படுத்தியது என்று அவர் வாதிட்டுள்ளார்.
லோர்ட் போல் முன்னாள் ஜனாதிபதியை பிரித்தானியாவில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள அழைத்திருந்தார் என்பதையும் குறிப்பிட்டார்.
நீதிமன்றில் குழப்பம்
இவர் விடுதலைப் புலிகளின் தடை மற்றும் GSP+ சலுகைகள் போன்ற முக்கியமான விடயங்களில் இலங்கையை ஆதரித்த புகழ்பெற்ற நபர். இந்த சம்பவம் அத்தகைய நபர்களை சங்கடப்படுத்தியுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த சர்ச்சை எழுந்த உடனேயே லோர்ட் போல் காலமானார். ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்ட அதிர்ச்சி அவரது மரணத்திற்குக் காரணமா என்பது எங்களுக்குத் தெரியாது என திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம், ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், அதன் வேந்தரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் லோர்ட் போல் ஒஃப் மேரிலேபோன் ஒகஸ்ட் 21ஆம் திகதி காலமாகியுள்ளார், ரணில் விக்ரமசிங்க 22ஆம்திகதி கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.





ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
