ரணிலின் வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக நீதிமன்றம் செல்லும் உயர்ஸ்தானிகர்
புதிய இணைப்பு
ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக இன்றைய தினம்(26) பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நீதிமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
நேற்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் ஐக்கிய தேசியகட்சியினர் தூதரங்களின் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதினை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மூத்த உறுப்பினர்கள் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்றுமுன்தினம் சந்தித்தாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
கொழும்புக்கு வரவுள்ள அமெரிக்க தூதுக்குழுவையும் UNP உறுப்பினர்கள் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சில முன்னணி சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ரணிலின் கைது தொடர்பான விவரங்களை அறிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டுள்ளன.
மேலும், மூன்று முக்கிய நாடுகளின் அதிபர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் வஜிர அபேகுணவர்தனவுடன் தொலைபேசியில் பேசி, சமீபத்திய நிலவரங்கள் குறித்து விவாதித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் ஐக்கிய தேசியகட்சியினர் இந்த விடயங்கள் தொடர்பில் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்த விடயங்கள் தொடர்பில் நோக்குகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...



