நிரந்தர நியமனம் கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்(Video)
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்கள், நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் இவர்கள் ஒன்று திரண்டு இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு
“நீண்ட காலமாக நிரந்தர நியமனம் இன்றி தற்காலிகமாக தற்காலிகமாக உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றி வருகின்றோம். தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு தற்காலிக வேலைக்காக வழங்கப்படும் வேதனம் போதாது. தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் கடமையாற்றும் அதிகாரிகளை சந்தித்து மகஜர் ஒன்றிணையும் கையளித்து விட்டு கண்டி பிரதான வீதியூடாக ஆளுநர் அலுவலகத்தை நோக்கி சென்றனர்.














TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri