திருகோணமலை மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து, நேற்று திங்கட்கிழமை(14) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
வீதியால் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த வீதியால் பயணித்துக் கொண்டிருந்த நபரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
