வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி

Vavuniya Sri Lanka Police Investigation Death
By Thileepan Apr 15, 2025 02:21 AM GMT
Report

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(14) மாலை இடம்பெற்றுள்ளது.  

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, சிதம்பரபுரத்தில் தற்காலிகமாக வசித்து வந்த இளைஞர் ஒருவர் தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு தனது உறவினர்களுடன் வருகை தந்திருந்த நிலையில் குறித்த இளைஞர் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்துள்ளார்.

முன்னைய எஜமான்களை சிக்க வைக்கும் வாக்குமூலங்களை வழங்கியுள்ள பிள்ளையான்

முன்னைய எஜமான்களை சிக்க வைக்கும் வாக்குமூலங்களை வழங்கியுள்ள பிள்ளையான்

உடற்கூற்று பரிசோதனை

இதன்போது, அவர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி | Youth Dies After Drowning In Swimming Pool

சம்பவத்தில் கண்டி, நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இதேவேளை, வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்த குளிரூட்டி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இயங்காமையால் சடலத்தை அங்கு வைக்க முடியாது எனவும், இறந்தவரின் உறவினர்களை வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சடலத்தை  ஒப்படைக்குமாறும், மறுநாள்  மீண்டும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு கோட்டாபய நிதியுதவி! வெளியாகிய குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு கோட்டாபய நிதியுதவி! வெளியாகிய குற்றச்சாட்டு

குடும்ப நிலை

இதன்போது, குறித்த குடும்பத்தினர் தமது குடும்ப நிலை காரணமாக சடலத்தை செட்டிகுளம் வைத்தியாலைக்கு கொண்டு செல்ல, வாகனத்தை வாடகைக்கு அமர்த்த முடியாத நிலையில் அவதிப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி | Youth Dies After Drowning In Swimming Pool

இந்நிலையில் சம்பவம் தொடர்பில்  வன்னி மாவட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், இளைஞரின் உறவினர்களுடன் கலந்துரையாடியதுடன், சம்பவம் தொடர்பில் கேடடறிந்த பின் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரின் கவனத்திறகு குறித்த விடயத்தை கொண்டு வந்த நிலையில், வைத்தியசாலையால் பொறுப்பேற்கப்பட்ட சடலத்தை செட்டிகுளம் அனுப்பி அதனை மீள பெற வேண்டியது வைத்தியசாலையின் பொறுப்பு எனத் தெரிவித்திருந்தார்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US