ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்த திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) ஆதரித்து திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பினால் கிளைக்காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த காரியாலயம் இன்று (31.08.2024) திருகோணமலை அநுராதபுர சந்தியில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரளவின் பங்கேற்புடன் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கட்சி ஆதரவாளர்கள்
இதன்போது, ஜனாதிபதி தேர்தலில் சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களித்து ரணில் விக்ரமசிங்கவை ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பின் தலைவர் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சன்திப் சமரசிங்க மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 27 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
