கன மழையால் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்(Photos)
நாட்டின் ஏனைய பகுதிகளில் போன்று திருகோணாமலை மாவட்டத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது.
இதற்கமைய கிண்ணியா,மூதூர்,சம்பூர், முள்ளிப் பொத்தானை, தம்மலகமம், கந்தளாய், நிலாவெளி,குச்சவெளி, வெருகல், ஈச்சலம்பற்று முதலான பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

இவ்வாறு தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக தாழ்நிலைப் பகுதிகளில் நீர் தேங்கி நிற்பதோடு அண்மையில் விதைக்கப்பட்ட வேளாண்மை வயல்களிலும் நீர் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்தொழிலாளர்களின் நிலை

இதேவேளை மாஞ்சோலை, மாஞ்சோலை சேனை, பெரிய கிண்ணியா, சின்ன கிண்ணியா முதலான பகுதிகளில் உள்ள சில பகுதிகளில் நீர் நிறைந்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடல் அலைகளின் வேகம் அதிகரித்து காணப்படுவதனால் கடல் தொழிலில் ஈடுபடும் கடற்தொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொண்டுள்ளனர்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 16 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri