திருகோணமலை வைத்தியரின் நெகிழ்ச்சியான செயல் (VIDEO)
எரிபொருள் இன்மையால் வைத்தியர்கள் தங்களது வைத்திய சேவையை தொலைபேசி ஊடாக மேற்கொள்ளும் அவல நிலை உருவாகி உள்ளதாக திருகோணமலை மாவட்ட வைத்தியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச வாகனங்கள் மற்றும் தமது சொந்த வாகனங்களை கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வைத்தியர் சேவை
கிராமப்புறங்களில் வாழ்ந்து வரும் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தமது குடும்பத்தில் எவருக்காவது சுகயீனம் ஏற்பட்டால் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்தியர் லசித திலகரட்ன நோயாளர்களின் நலன் கருதி தமது சொந்த செலவில் வைத்திய சேவையை வழங்கி வருகின்றார்.
சமூக சேவை

குறிப்பாக வைத்தியசாலையை அண்மித்த கிராமங்களில் வசித்து வரும் நோயாளர்களின் நலன் கருதி எரிபொருள் இல்லாமல் வைத்தியசாலைக்கு செல்ல முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் நோயாளர்களுக்கு தொலைபேசி ஊடாக நோயாளர்களை பார்வையிட்டு நோயாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தமது சொந்த செலவில் வீடுகளுக்கு மருந்துகளை அனுப்பி வருவதாகவும் தெரிய வருகின்றது.
இவர் தமது கடமையை செய்து கொண்டு சமூக சேவைகளிலும் ஈடுபடுவது மக்கள் மத்தியில்
பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri