மகளிர் சுயசேமிப்பு குழுக்களுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நிதி உதவி
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் புலம்பெயர் அமைப்புக்களின் நிதி உதவியில் கிராமங்களில் உள்ள மகளிர் சுயசேமிப்பு குழுக்களை ஊக்குவிப்பதற்காக நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 14 குழுக்களுக்கு தலா 25 ஆயிராம் ரூபா வீதம் நிதி உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிதி உதவி வழங்கும் நிகழ்வு இன்று(06) முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மண்டபத்தில் தாய் தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.றூபன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
நிதி உதவி
நேசக்கரங்கள் அமைப்பின் கிராம மகளிர் சுயசேமிப்பு குழுக்களுக்கான ஒருகோடி நிதி வழங்கல் திட்டத்தில், தாய் தமிழ் பேரவையின் ஆதரவோடு நேசக்கரங்கள்- இங்கிலாந்து கிளை மற்றும் நேசக்கரங்கள்- கனடா கிளை என்பன ஒன்றிணைந்த நிதிப்பங்களிப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வு
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன், கரைதுறைப்பற்று
உதவி பிரதேச செயலாளர் தாய் தமிழ் பேரவையின் ஆலோசகரும் ஒட்டுசுட்டான் சுகாதார
வைத்திய அதிகாரியுமான வைத்தியகலாநிதி கை.சுதர்சன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan
