வாழ்க்கைச் செலவு தொடர்பான உப குழு அமைக்க அனுமதி
வாழ்க்கைச் செலவு தொடர்பான உப குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இந்த அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது.
வாழ்க்கைச் செலவு தொடர்பான உப குழு
இந்த குழு வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு தொடர்பான இந்த அமைச்சரவை உப குழுவில் தலைவராக ஜனாதிபதி செயற்படுவார்.
இதனைத் தவிர பிரதமர், மீன்பிடித் துறை அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர், விவசாய துறை அமைச்சர், பெருந்தோட்டதுறை அமைச்சர், மின்சார மற்றும் எரிசக்தி துறை அமைச்சர், வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
உப குழுவில் அமைச்சுக்களின் செயலாளர்கள்
இதேவேளை உணவு பாதுகாப்பு குழு ஒன்றை அமைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
இதன்படி உணவு பாதுகாப்பு துறை மற்றும் வர்த்தக துறை அமைச்சர் இந்த குழுவுக்கு பொறுப்பாக இருப்பார்.
அதே நேரம் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள் இந்த குழுவில் அங்கம் வாகிப்பர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
