நாலரை மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் வழக்கு

Trincomalee M A Sumanthiran Mavai Senathirajah Law and Order ITAK
By Rakesh Mar 14, 2026 08:26 AM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று(13) மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் சுமார் நாலரை மாதங்களுக்கு - ஜூலை 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த வழக்கில் இடையீட்டு எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்திருக்கின்ற விண்ணப்பத்தின் மீதான விசாரணைக்காகவே வழக்கு ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ரணிலுக்கு எதிராகத் தோண்டும் குழி! அநுர - ஹரிணிக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை

ரணிலுக்கு எதிராகத் தோண்டும் குழி! அநுர - ஹரிணிக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை

கால அவகாசம்

வழக்காளியும் ஏனைய எதிராளிகளும் இது தொடர்பான தமது தரப்பு வாதங்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்காக இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நாலரை மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் வழக்கு | Trincomalee Court Itak Case Was Delayed

அந்தத் திகதியில் இந்த விடயம் குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது பற்றி நீதிமன்றம் தீர்மானிக்கும். இடையீட்டு எதிராளியாகச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் மீது விசாரணை முடிந்து, ஒரு முடிவு கட்டிய பின்னரே, மூல வழக்கின் மீதான விசாரணையை நீதிமன்றம் ஆரம்பிக்கும் எனத் தெரிகின்றது.

வழக்கில் புதிய எதிராளியாக இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரின் இடத்துக்கு சி.வி.கே.சிவஞானம் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள பின்னணியில், வழக்குத் தொடர்பான அவரது பதில் மனு நீதிமன்றத்தில் அணைக்கப்பட்டுள்ளது.

அப்படி அவரது பதில் மனுவைச் சேர்த்துக் கொள்வதை எதிராளிகளில் ஒருவரான சிவஞானம் சிறீதரனின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரன் நேற்று கடுமையாக ஆட்சேபித்தார்.

சுரேஷ் சலே தொடர்பில் போலியான கதைகள்! ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைச் சாடும் நாமல்

சுரேஷ் சலே தொடர்பில் போலியான கதைகள்! ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைச் சாடும் நாமல்

பதில் மனு தாக்கல்

ஏற்கனவே எதிராளியாக இவ்வழக்கில் இருந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்த வழக்குத் தொடர்பாக தமது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நாலரை மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் வழக்கு | Trincomalee Court Itak Case Was Delayed

அந்தநிலையில் அவருக்குப் பதிலாகப் பதிலீடு செய்து வழக்குக்குள் வரும் எதிராளியான சி.வி.கே.சிவஞானம் தமது புதிய பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டிய இடமில்லை என்று அவர் வாதிட்டார்.

ஆயினும் எதிராளிகளான சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று நீதிமன்றத்தில் அந்த வாதத்தை எதிர்த்து வாதம் செய்தனர். நீதிமன்றம் இருதரப்பு வாதத்தையும் நேற்றைய அமர்வில் செவிமடுத்துப் பதிந்து கொண்டது.

வழக்கில் இடையீட்டு எதிராளியாக தம்மை சேர்த்துக்கொள்ளக் கோரி சுப்பிரமணியம் பரமானந்தம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்து, மூல வழக்கின் மீதான விசாரணை ஆரம்பமாவதற்கு நீண்ட காலம் செல்லலாம் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்த வழக்கில் தமக்குத் தாமே நேரடியாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகி வாதாடி வரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய வழக்கு விசரணையின் போது, மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் பிரசன்னமானார்.

சுரேஷ் சலே கைதில் திடீர் திருப்பம்! பிள்ளையானுடன் சிக்கிய புகைப்படம்..

சுரேஷ் சலே கைதில் திடீர் திருப்பம்! பிள்ளையானுடன் சிக்கிய புகைப்படம்..

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US