திருகோணமலையில் இன்று மாத்திரம் 17 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
திருகோணமலை மாவட்டத்தில் இன்று மாத்திரம் 17 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இதனடிப்படையில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏழு பேரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று பேரும், குச்சவெளி பிரதேசத்தில் 4 பேரும், கிண்ணியா பிரதேசத்தில் இருவரும், கந்தளாயில் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளது.
அத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தாதிய உத்தியோகத்தர்கள் ஐந்து பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் ஒருவருக்கு ஏற்கனவே கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை திருகோணமலை நகர்ப்பகுதியில் நேற்றைய தினம் இனங்காணப்பட்ட 3 பாடசாலைகளிலிருந்து ஆசிரியர் இருவரும், மாணவர் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து கல்வி நிலையங்களை மூடுவதற்காக ஆலோசித்து
வருவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan