ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் திருகோணமலை மாவட்ட குழு தெரிவு
திருகோணமலை மாவட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் மாவட்ட கூட்டம் தலைவர் இராஜேந்திரா மற்றும் பொதுச் செயலாளர் ஜீவன் ஆகியோரின் தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டம் உப்புவெளியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் கடந்த சனிக்கிழமை (12) மாலை நடைபெற்றுள்ளது.
ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக செயலாளர் தெரிவு
இக்கூட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக செயலாளராக திருகோணமலை நகரசபை முன்னாள் உறுப்பினர் க.ஜெயப்பிரகாஷ் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து கட்சியின் மாவட்ட குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட குழு தலைவராக ஈரோஸ் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் நாதனும், செயலாளராக சந்திராவும், பொருளாளராக ஜெயஸ்கரனும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
