திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : கம்மன்பில கிளப்பியுள்ள புதிய சர்ச்சை
திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலை தொடர்பான வழக்கில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை சர்ச்சைக்குரியது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று(28.01.2026) சென்றிருந்த அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அநீதியான குற்றப்பத்திரிகை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வழக்கின் குற்றவாளிகளுக்கு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையில் பொலிஸாரை பிக்குகள் தாக்கியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொலிஸார் பிக்குகளை தாக்கியதை முழு நாடுமே பார்த்தது.
விகாரைக்கு வந்தது பொலிஸார், முத்துக்குடை உடையும் வரை தாக்கியவர்கள் பொலிஸார். ஆனால் அநீதியாக அசாதாரணமாக பல குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்ததால் அனைத்து குற்றவாளிகளும் தாங்கள் நிரபராதிகள் என தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்டில் மதங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் விதத்திலேயே பொலிஸார் செயற்படுகின்றனர். கத்தோலிக்க மதகுரு ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக செய்த முறைப்பாட்டில் ஆறு பொலிஸார்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் பிக்குகள் செய்த முறைப்பாட்டுக்கு எவ்வித நடவடிக்கைகும் இதுவரை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam