கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்
திருகோணமலை - திரியாய் பகுதியில் வயலில் காவலுக்குச் சென்ற ஒருவரை கரடி தாக்கியதில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திரியாய் பகுதியில் உள்ள வயலில் காவலுக்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்த போது கரடி பாய்ந்து அடித்ததாகவும் இதனையடுத்து காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
காயமடைந்த நபரை புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளார் தெரிவித்தார்.
இவ்வாறு கரடியின் தாக்குதலுக்கு உள்ளானவர் திரியாய் - கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கே. பிரபாகரன் 48 வயதுடையவர் என தெரியவருகின்றது.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யானையின் தாக்குதலுக்கு உள்ளான ஒருவரும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் யானையின் தொல்லை மற்றும் கரடியின் தொல்லை அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
